மீண்டும் தொடங்கிய லட்சுமி மேனன் படப்பிடிப்பு

lakshmi-menon

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘யங் மங் சங்’. பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பிரபுதேவா அப்பாவாக இயக்குநர் தங்கர்பச்சான் நடிக்க, ஆர்.ஜே. பாலாஜி, சித்ரா லட்சுமணன், அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரீஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. சத்யமங்கலம் அருகே ஒரு பாடலைப் படமாக்கி வருகிறது படக்குழு. லட்சுமி மேனன் கையில் இருக்கும் ஒரே ஒரு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்காக பிரபுதேவா எழுதிய பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன