அரசியலில் ஈடுபடும் லதா ரஜினிகாந்த்

latha-rajthakre

அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தாலும், திரைப்படங்களில் நடிப்பதில் தான் ரஜினிகாந்த் ஆர்வமாக இருக்கிறார். இதனால் அவரது அரசியல் பிரவேசம் இன்னமும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், அவரது மனைவி லதா தற்போது அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது, ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து அரசியல் குறித்து பேசியிருக்கிறார். இதனை ராஜ்தாக்ரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

latha-rajthakre2

30 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த பால்தாக்ரேவை தனது கடவுள் என்று ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரஜினிகாந்தின் மனைவி அவரது குடும்பத்தாரை சந்தித்து அரசியல் குறித்து பேசியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன