தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருப்பவர் மாதவன். இவர் தற்போது ஷாருக்கானுடன் இணைந்து பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். ஷாருக்கானும் சல்மான் கானும் 10 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜீரோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மாதவன், ஷாருக்கானுடன் இணைந்து தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அனுஷ்கா சர்மா மற்றும் ஆனந்த் எல் ராய் உடனிருந்தனர்.