கன்னடத்தில் களமிறங்கும் மடோனா

madonna-sebastian

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன். தமிழில் காதலும் கடந்து போகும், கவண், ப.பாண்டி ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு எனத் தொடரும் மடோனாவின் பயணம் தற்போது கன்னடத்திலும் தொடங்க உள்ளது.

கன்னடத்தில் நடிகர் சுதீப் திரைக்கதை எழுதி நடித்த கொட்டிகொபா படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் மூன்றாம் பாகத்துக்கும் திரைக்கதை எழுதிய அவர், அந்தப் படத்தின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அறிமுக இயக்குனர் சிவகார்த்திக் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கி நடைபெற்றது. ஆனால் கதாநாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமல் இருந்த நிலையில் தற்போது மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் மடோனா கலந்துகொள்ளவிருக்கிறார். 40 நாட்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படத்தை வெளியிடபடக் குழு திட்டமிட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன