கீர்த்தி சுரேஷ் நடிப்பிற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

keerthi-suresh

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நடிகையர் திலகம்’. இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினார்கள். நடிகர் கமல்ஹாசன், விஜய் மற்றும் ராஜமௌலி உள்ளிட்ட பலர் கீர்த்தி சுரேஷை பாராட்டினார். சாவித்திரியின் நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்திய கீர்த்திசுரேஷூக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேச திரை விழாவில் IFFM Equality In Cinema விருது கிடைத்துள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன