யாஷிகாவால் முறிந்த மகத் காதல்

mahat

பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே சென்ற படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் மகத்துக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கடந்த வாரம் இருவரும் வெளிப்டையாக ஒப்புக்கொண்டனர். யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதனைப் பார்த்ததும் மனம் உடைந்தார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிராச்சி, “நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன