இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு

maheshbabu

சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை’ படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து.

அதேபோல `அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் வெளியானது. தெலுங்கு ரசிகர்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட `அபிமன்யுடு’ படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக தெலுங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், `அபிமன்யுடு’ படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகஷே் பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து மகேஷ் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் தனது நோக்கத்தை திரையில் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன