அதர்வா படத்தின் ட்ரைலரை வெளியிடும் மணிரத்னம்

maniratnam

அதர்வா தற்போது ‘செம போத ஆகாதே’ படத்தை தொடர்ந்து ‘பூமராங்’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது ‘பூமராங்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் படத்தின் டிரைலரை நாளை காலை 10.20 மணிக்கு பிரபல இயக்குநர் மணிரத்னம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன