பிடிவாதத்தால் நிறைய படங்களை இழந்த மனீஷா யாதவ்

manishayadav

“ஆதலால் காதல் செய்வீர்”, “வழக்கு எண்18/9”, “ஒரு குப்பை கதை” படம் மூலம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மனீஷா யாதவ் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கும் மனீஷா நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இது குறித்து பேசிய மனீஷா யாதவ், “பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன் என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது. இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்து கொடுத்திடுச்சு. அங்கிருந்து தான் நான் “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்துக் கொண்டேன்.

என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்” என்று அழுத்தமாக கூறும் மனீஷா யாதவ் தற்போது முன்னணி கதாநாயகன் ஒருவரது படத்தில் நடிப்பதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன