என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றில் மஞ்சிமா

Manjima-Mohan

ஆந்திராவின் பிரபல நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். என்.டி.ஆர். மனைவியாக வித்யாபாலனும், சாவித்ரியாக கீர்த்தி சுரேஸும் ஸ்ரீதேவியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்கும் நிலையில் அவரது மனைவி புவனேஷ்வரி வேடத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான மஞ்சிமா மோகன் தற்போது தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன