சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளுடன் புதுப்படங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் திரில்லர் படம் தான் `ரெடி டு சூட்’.
எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கிறார். இவர் நேரம், பிரேமம், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஆனந்த் நாக் ஜோடியாக ஜீவிதாவும், வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜாவும் நடிக்கின்றனர். சதீஷ் கதிர்வேல் ஔிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.