ஒரே நாளில் ஐந்து விருதுகளை குவித்த ‘மெர்சல்

vijay-in-mersal

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் விருது வழங்கும் விழாவில் இந்த படம் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கனவே ஒருசில விருதுகளை வென்றுள்ள நிலையில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய் விருதுகள் விழாவில் ஐந்து முக்கிய பிரிவுகளில் விருது பெற்றுள்ளது

சிறந்த பாடலுக்கான விருது ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடலுக்கும், சிறந்து இயக்குனர் விருது இயக்குனர் அட்லிக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சிறந்த படம் விருது மற்றும் சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே.சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை ‘விக்ரம் வேதா’ படத்திற்காக விஜய்சேதுபதி தட்டிச்சென்றுவிட்டதால் அந்த விருதினை மட்டும் ‘மெர்சல்’ மிஸ் செய்துவிட்டது.
இருப்பினும் ஒரே நாளில் ஐந்து விருதுகளை ‘மெர்சல்’ திரைப்படம் குவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன