சர்வதேச விருதைப் பெற்ற ‘மெர்சல்’

mersal-vijay-wallpaper

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் விஜயுடன் சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால்,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் தென்கொரியாவின் புச்சியான் நகரில் நடைபெற்ற புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மெர்சல் படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த சர்வதேச விருது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன