விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் மோகன்லால்

suraya_mohanlal

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், என்.ஜி.கே. படத்தை முடிந்த பிறகு சூர்யா கே.வி.ஆனந்த் படத்தில் இணையவிருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *