பிரியங்கா சோப்ராவுக்கு நோட்டீஸ்

priyanka-chopra

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மும்பை, அந்தேரி மேற்கில் ஓசிவாரா எனுமிடத்தில் சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் காலியாக இருந்த இடத்தில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி அழகு நிலையம் ஒன்றுக்காக கட்டிடம் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகை பிரியங்கா சோப்ராவின் வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடம் கட்டப்பட்டதிலும், சீரமைப்பு செய்ததிலும் விதிமீறல்கள் நடந்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மும்பை மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீசில் பிரியங்காவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன