மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி

mysskin-udhayanidhi

விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக சாந்தனுவை வைத்து படம் இயக்க இருந்தார். இது குறித்து அறிவிப்பும் வெளியிட்ட நிலையில், படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் திடீரென்று பின் வாங்கியது. இதனால், சாந்தனு – மிஷ்கின் கூட்டணி சேராமல் போய்விட்டது.

இந்த நிலையில், சாந்தனு நடிக்க இருந்த கதையை உதயநிதியை வைத்து மிஷ்கின் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் நடிப்பதோடு, தனது சொந்த நிறுவனத்தின் மூலம் உதயநிதி தயாரிக்கவும் செய்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன