நாளை கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு

nadigar-sangam

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (19-ந் தேதி) சென்னை கலைவாணர் அரங்கில் மதியம் 2 மணிக்கு நடைபெறவிருக்கிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.

நடிகர் சங்கத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். விஷால் அணியே மீண்டும் களம் இறங்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் களமிறங்க இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. ஆனால் எதிரணியினர் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

இப்படி பரபரப்பான சூழலில் நாளை பொதுக்குழு கூடுகிறது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு நடைபெறுவதால் நாளை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன