‘நரகாசூரன்’ ட்ரைலர் வெளியீடு

Naragasooran-movie

‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’. நடிகர் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களே இல்லாத இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அறிவித்திருந்தபடி நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. ரோன் ஈதன் யோகன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன