சரத்குமார்-ராதாரவிக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்த நாசர்

naasar

காஞ்சீபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 29 சென்ட் நிலம் இருந்தது. இந்த இடத்தை கடந்த 2006-ம் ஆண்டு முறைகேடாக விற்றதாக அப்போதைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் நடிகர் சங்கம் சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் மனு காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணைக்கு வந்தது. ஆனால் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காஞ்சீபுரம் மாவட்ட போலீசுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12 மணி அளவில் நடிகர் சங்க தலைவர் நாசர், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

அவர் சரத்குமார், ராதாரவிக்கு எதிரான ஆவணங்களை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிடம் வழங்கினார். தொடர்ந்து நடிகர் சங்க நிலம் குறித்தும் அவரிடம் விளக்கினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *