சினிமாவில் அறிமுகமாகும் நாசரின் மற்றொரு மகன்

nasar-son

நடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களுள் இரண்டாவது மகனான லுத்புதீன் ஏற்கனவே இயக்குனர் ஏ.எல். விஜயின் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கம் புதிய படத்தின் மூலம் நாசரின் இளைய மகனான அபி மெக்தி சினிமாவில் அறிமுகமாகிறார். விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் அபி மெக்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அபி மெக்தி அக்‌‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *