ரசிகர்களால் ஆச்சரியம் அடைந்த நடிகை

Natasha-Singh

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் `ஜிப்ஸி’. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில்துவங்கியது. இதில் ஜீவா, நாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

முதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. ‘‘மிஸ்.இமாச்சல் பிரதேசம் ஆன நடாஷா சிங் படித்தது பொறியியல். நடாஷா மாடலிங் குக்காக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

நாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் என்னிடம் அதற்குள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். செம ஆச்சர்யமாக இருக்கு!’’ என்று படபடக்கிறார் நடாஷா.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன