போதை மருந்து கடத்தும் நயன்தாரா

nayan

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார். அனிருத் அளித்திருக்கும் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை.

இதை நெல்சன், பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியாப் பண்ணியிருக்கார். நயன் எனக்கு நெருக்கமான தோழி. சமயத்தில் விருந்து மாதிரி சாப்பாடு சமைத்து அனுப்புவார். அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி என்று சொல்வார். அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள்.

ஆனால் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம்’ என்று சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போகிறார். ஜனவரி மாதம் படம் துவங்க இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *