இயக்குநர் விஜய்யின் படத்தில் நயன்தாரா

nayan_

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, அஜித், கமல், சிரஞ்சீவி என்று ஒரே நேரத்தில் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அதே சமயம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருபவர், ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் படங்களுக்கு பல கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் விஜய்யின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நயன்தாராவுக்கு சம்பளம் ரூ.5 கோடி பேசப்பட்டுள்ளதாம்.

விஜய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தியா’ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து விஜய் இயக்கியுள்ள ‘லட்சுமி’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக இரண்டு புதிய படங்களை இயக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதில் ஒரு படம் முழுக்க முழுக்க ஹீரோயின் கதையாம். இதில் தான் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

நயன்தாராவிடம் கதை சொல்லி, கால்ஷீட்டையும் விஜய் பெற்றுவிட்டாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா கேட்ட ரூ.5 கோடி சம்பளத்தை படக்குழுவினர் தர சம்மதித்துவிட்டார்களாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *