கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?

nayanthara

ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்தனர்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சினிமா வட்டாரங்கள் இதை உறுதி செய்துள்ளன.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன