வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் ஆரவ் – ஓவியா

மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் மக்களிடம் தனது இயல்பான, நேர்மையான நடவடிக்கைள் மூலம் மிகப்பெரிய பாராட்டையும், செல்வாக்கையும் பெற்றவர் நடிகை ஓவியா. அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் வெற்றி பெற்றவர் ஆரவ்.

நிகழ்ச்சியின் போதே நடிகை ஓவியாவும், ஆரவும் காதலிப்பதாக சர்ச்சைகள் கிளம்பியது. இதனை ஓவியா ஒப்புக்கொண்ட நிலையில் ஆரவ் தொடர்ந்து மறுத்து வந்தார். வெளியில் வந்தப் பின் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதாக பல தகவல்கள் வெளியாகின. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது ஓவியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.

oviyaaarav

இந்நிலையில் இருவரும் இணைந்து பாங்காங் சென்றுள்ளனர். இருவரும் பாங்காங்கில் ஒன்றாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதன்மூலம் இருவரும் காதலிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ரசிகர்களிடமிருந்து ஓவியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன