ஆரவுடன் மீண்டும் காதலா? – ஓவியா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

oviya2

கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ என பதிவிட்டார். நானும் ஓவியாவும் நட்புடன் பழகி வருகிறோம் என ஆரவ் தொடர்ந்து கூறி வருகிறார்.

oviya_aarav

இந்நிலையில், ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்று ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதைக்கண்டு அவரின் ரசிகர்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். வேண்டாம்.. ஆரவ் வேண்டாம்..என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனாலும், பலர் ஓவியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு செல்பி புகைப்படம்தான். அவர்களுக்குள் என்ன உறவு என தெரியவில்லை. எனவே, ஏன் அவசரம்? என சிலரும், ஓவியாவின் முகத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. அது காதல்தான் எனவும் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மொத்தத்தில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன