பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் மரணம்

geeta-kapoor

‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார்.

இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த நடிகைக்கு திரைத்துறையினர் சிலர் உதவி செய்தனர். பின்னர் அவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு நேற்று முன்தினம்  உடல்நிலை சரியல்லாமல் போனது. இதையடுத்து அவர் கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நடிகை கீதா கபூருக்கு வயது 57.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *