‘பாரிஸ் பாரிஸ்’ படப்பிடிப்பு முடிந்தது

kajal

இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படம் தற்போது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் தயாராகும் இப்படத்தை இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பாவில் முடிந்தது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன