10 பிரபல நடிகர்களுடன் இணையும் பார்த்திபன்

Radhakrishnan Parthiban

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், பார்த்திபனுடன் நடந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது,

நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2, நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு வி‌ஷயமும் படத்தில் உண்டு.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன