ஒற்றுமையாக இருந்தால் சினிமா பிரச்சனையைத் தீர்க்கலாம் – பார்த்திபன்

Radhakrishnan Parthiban

தமிழ் சினிமாத் துறையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கியூப் பிரச்சனை. இதனை சரி செய்வதற்காக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ ஃப்ளெக்ஸ் நிறுவனமும் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் பார்த்திபன், மயில்சாமி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், “சினிமாவில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். நமக்குள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் அவற்றை சரி செய்ய முடியும். பெப்சியின் தலைவராக செல்வமணி பொறுப்பேற்றவுடன் நல்ல ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. என்னுடைய 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இல்லாத ஒற்றுமை தற்போது உள்ளது. சினிமாவை நல்ல நிலைக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபடுவோம்” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன