நான்காவது முறையாக ரஜினியுடன் இணைகிறார் பீட்டர் ஹெய்ன்

peter_hein

ரஜினிகாந்த் நடிப்பில் `காலா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் துவங்கி நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பீட்டர் ஹெய்ன் ஏற்கனவே ரஜினியுடன் சிவாஜி, எந்திரன் மற்றும் கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி – பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன