டுவிட்டரில் இருந்து விலகிய பூனம் கவுர்

Poonam_Kaur

நெஞ்சிருக்கும்வரை, வெடி, நாயகி உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் பூனம் கவுர். தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் பிரபலமான நடிகை. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் திடீர் என்று “டுவிட்டரில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் எனத் தெரியாது’ என்று பதிவிட்டு வெளியேறியுள்ளார்.

சமீப காலமாக பூனம் கவுர் சமூக வலைதளங்களிலும், போனிலும் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவரைப் போலவே தெலுங்கு முன்னணி கதாநாயகன் பவன் கல்யானின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் டுவிட்டரில் இருந்து சமீபத்தில் விலகினார். அவரும் மற்றொரு காரணத்துக்காக மிரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன