பிரபாகரன் மகன் பற்றிய படம் – இலங்கையில் தடை

SaatchigalSorgathil

இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் பத்திரிக்கையாளர் இசைப்பிரியா ஆகியோர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் எங்கும் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் இவ்விரு படுகொலைகளையும் மையப்படுத்தி தற்போது ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. ஈழன் இளங்கோ இயக்கியுள்ள இப்படத்தை இலங்கையில் திரையிட அந்நாட்டுத் தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. படத்தின் கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதாகவும்,அவை இலங்கை அரசுக்கும், இராணுவத்திற்கும் எதிராக உள்ளதாகவும், இப்படம் வெளியானால் இலங்கையில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தடைக்கான காரணங்களை தணிக்கைக் குழு கூறியுள்ளது.

இருப்பினும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்டு, அனைத்து மொழி பேசும் மக்களையும் பார்க்க வைப்போம். இதன்மூலம் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என்று இப்படத்தின் இயக்குனர் ஈழன் இளங்கோ கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன