மாறி 2 வில் பிரபுதேவா

dhanush-prabhudeva

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’.  ஏற்கெனவே ரிலீஸான ‘மாரி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பின் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, மாரி 2 படத்தில் தங்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அவருடைய மேஜிக்கைப் பார்த்து வளர்ந்த தனக்கு, இது மிகப்பெரிய தருணம் என்றும் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன