கமலுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம்

Prakash-Raj-Kamal

சமீபத்தில் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசிய நடிகர் கமல்ஹாசன்,  காவிரி பிரச்சனை குறித்து அவரிடம் பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல், இந்த நேரத்தில் ‘காலா’ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது; பேசவும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கமல் கர்நாடக முதல்வரிடம், காலா திரைப்படம் குறித்து பேசாதது தவறு, அவரின் விஸ்வரூபம் படம் பிரச்சினை ஏற்பட்டபோது அதை பெரிதுபடுத்தி, தேவையற்ற விளம்பரம் தேடிய கமல்ஹாசன் தற்பொழுது ஏன் காலா படத்துக்கு குரல் கொடுக்காமல் இருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

படத்தை வெளியிடக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. படத்தை வெளியிட வேண்டும் என்றும், படத்தைப் பார்ப்பதும் பார்க்காததும் மக்களின் விருப்பம் எனவும் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன