விஜய் மற்றும் ரஜினியை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி

modi-vijay-rajini

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு வர இருக்கும் தேர்தல் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், அதிகமான ரசிகர்கள் உள்ள நடிகர் விஜய்யும் சத்தமில்லாமல் அரசியல் காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் அழுத்தமாக கால் பதிக்க நினைக்கும் பாரதீய ஜனதா கட்சி, தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்திய அளவில் சினிமா பிரபலங்களை சந்தித்து அவர்களது ஆதரவையும் கேட்டு வருகிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி சந்தித்து பேசியதோடு, பா.ஜ.க-வின் சாதனை புத்தகத்தையும் வழங்கினார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரையும் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலின் போது கூட பிரதமர் மோடி ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன