மும்பையில் நடைபெற்ற பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்

Priyanka-Chopra-Nick-Jonas3

பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிஸியாக இருக்கிறார். ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவர் வீட்டிலும் இதற்கு சம்மதித்த நிலையில் இருவரும் அவ்வப்போது வெளியே ஒன்றாக வலம் வந்தனர்.

priyanka_chopra-nick_jonas

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் கிசு கிசு பரவியது. இந்நிலையில் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவரான நிக் ஜோனஸ் சமீபத்தில் இந்தியா வந்து பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படி நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Priyanka-Chopra-Nick-Jonas2

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன