‘பியார் பிரேமா காதல்’ ரிலீஸ் தேதி மாற்றம்

pyaar

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற ஹரிஷ் கல்யாண் – ரைசா நடிப்பில் வெளியாகவுள்ள படம் `பியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ள படக்குழு நல்லவைக்காக காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன