கலைஞர் மறைவு – பியார் பிரேமா காதல் ரிலீஸ் தேதி மாற்றம்

pyaar

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற ஹரிஷ் கல்யாண் – ரைசா நடிப்பில் வெளியாகவுள்ள படம் `பியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நல்லவைக்காக காத்திருக்க முடியாது என்று கூறி ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி படம் ரிலீசாகும் என்று ட்விட்டர் மூலம் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், தங்களுடைய படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திரைப்படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன