ரஜினியிடம் பாராட்டு பெற்ற சிறுவன்

rajini

ஈரோட்டை சேர்ந்த சிறுவன் யாசின் சமீபத்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாயை தனது ஆசிரியரின் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தான் சிறுவனின் இந்த நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

rajini-yaasin

இந்நிலையில் அந்த சிறுவனை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு தங்கச் செயின் ஒன்றையும் பரிசளித்துள்ளார். மேலும் அவனுடைய படிப்பு செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள யாசின் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாக கூறினான்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன