மீண்டும் தாமதமாகும் ரஜினியின் 2.0

rajini

ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. 2.0 படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன