இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

Rajinikanth-kaala-audio-launch-chennai

சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். யோகி பாபு, ஜாக்குலின் உள்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சனை தொடர்புக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் நெல்சன், “எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கால் வந்தது. ரஜினிகாந்த் தான் அது. அவர் என்னிடம் சிரித்து சிரித்து ரசித்ததாக கூறினார். நன்றி சார்”

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன