ரஜினிகாந்த் மீண்டும் பயணம்

kaala main 1

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினி மும்பையில் வாழும் தமிழ் மக்களுக்காக போராடும் தலைவனாக நடித்திருக்கிறார். நிலத்தின் உரிமைக்காக போராடும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

படத்தின் ரிலீசையொட்டி தெலுங்கு பதிப்புக்கான விளம்பர நிகழ்ச்சி கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி கலவரம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ரஜினி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

தனுஷின் வுண்டர்பார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன