நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்

rajini

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயர் முடிவு செய்யப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டார்ஜிலிங் சென்றிருந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிவடைந்ததால் நேற்று சென்னை திரும்பினார். நேற்று கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தடைந்தார். விமான நிலைய வாசலில் அவருக்கு ரசிகர்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிவடைந்ததால் இனி அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன