கலைஞரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ரஜினிகாந்த், விஜய்

rajini-vijay2

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பினால் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

rajini-stalin

முதலமைச்சர், துணை முதலைமைச்சர் முதற்கொண்டு கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

vijay-stalin

இந்நிலையில் டேராடூனில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை வந்தடைந்து காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோன்று படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜய்யும் தற்போது காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன