சினிமாவில் வெற்றி பெற ரகுல் ப்ரீத் சிங் கூறும் யோசனை

rakul

ரகுல் ப்ரீத் சிங் சமீபகாலமாக தமிழ் மொழியில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என்று ஒரே நேரத்தில் தமிழின் மூன்று முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து வருகிறார். அவரிடம் கேட்டபோது, நடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறார்களோ அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும்.

மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழையும் கற்று வருகிறேன். இந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தென் இந்திய மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணாக பார்க்கிறார்கள்.

தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். கதாநாயகிகளுக்கு அழகு முக்கியம். அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து நிற்க திறமை தான் மிகவும் முக்கியம். திறமை இல்லாத நடிகைகளை அழகாக இருந்தாலும் ஒதுக்கிவிடுவார்கள்.

முன்பெல்லாம் கதைகளில் நான் ஈடுபாடு காட்டுவது இல்லை. வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டு நடித்தேன். இப்போது கதை தேர்வில் அக்கறையோடு இருக்கிறேன்’’ என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *