பூவிலங்கு மோகன் காரை உடைத்து கொள்ளை

poovilangu-mohan-2

பூவிலங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் மோகன். ஆதலால் ‘பூவிலங்கு’ மோகன் என்றே அழைக்கப்படுகிறார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், நாடக நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாடக ஒத்திகைக்காக சமீபத்தில் சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள ஒரு நாடக அரங்கிற்கு மதியம் காரில் வந்தார். காரை வெளியே நிறுத்திவிட்டு ஒத்திகைக்கு சென்றவர் திரும்பி வெளியே வந்த போது தன்னுடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனுள் பணமும் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களும் இருந்திருக்கிறது.

இதையடுத்து பூவிலங்கு மோகன் உடனடியாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன