உச்சத்தைத் தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்

vikram-saamy-square

ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான `சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். `சாமி ஸ்கொயர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் ஜூன் 2ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த டிரெய்லரில் வரும் விக்ரமின் நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல பூதம் என்ற ஆக்ரோஷமான வசனங்கள் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக படக்குழு மகழ்ச்சி தெரிவித்துள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன