படம் தயாரிப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை – சமந்தா

samanta

ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றதில் உற்சாகமாக இருக்கிறார் சமந்தா. அந்த உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி…

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களே?

இல்லை. யுடர்ன் படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அந்த படத்தை வேறு ஒருவர் தயாரிக்கிறார். அதில் பத்திரிகையாளராக வருகிறேன். வித்தியாசமான கதாபாத்திரம்.

பெரிய குடும்பத்தில் மருமகளாகி இருக்கிறேன். மிகவும் கவனமாக இருக்கிறேன். மாமனாரை பார்த்து பயந்தேன். ஆனால் அவர் மிகவும் கூலாக இருக்கிறார். ஏதாவது பிரச்சினை என்றால் ‘அட விடும்மா’ என்று உற்சாகப்படுத்துகிறார். சினிமா குடும்பம் என்பதால் என்னை புரிந்துகொள்கிறார்கள்.

திருமணத்துக்கு பின் அதிகமாக கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறீர்களே?

என் சமூக வலைதளங்களில் எந்த படங்களை வெளியிட வேண்டும் என்பது என் உரிமை. அதில் தலையிட, அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எனக்கு என் எல்லை தெரியும்.

பிரதிக்‌ஷா அமைப்பு மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தியுள்ளோம். தெலுங்கானா கைத்தறித்துறை தூதுவராக இருக்கிறேன். நெசவாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். தமிழக அரசு கேட்டால் இங்கேயும் தூதுவராக தயார்.

ரஜினி, கமல் யாருக்கு உங்கள் ஆதரவு?

அரசியல் பற்றி சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. சினிமா மட்டும்தான் தெரியும்.

திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டு விடுவேன் என்று நாக சைதன்யா கவலைப்பட்டார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில் எதிர்காலத்தில்கூட ஏற்படலாம். அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்க சண்டை போடுறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுப்போம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணர வைத்ததுதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு’ என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *