சமுத்திரக்கனியின் அடுத்த படம்

Samuthirakani2

பொதுவாக சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டி காட்டி அவற்றை தட்டி கேட்பது போன்ற சமூக படங்களில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் சமுத்திரக்கனி தற்போதும் அதே போன்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். வ.கீரா இயக்கும் இப்படத்தில் வழக்கறிஞராக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

ஊரைவிட்டு வெளியேறும் காதலர்கள், வீட்டை விட்டு வெளியேறும் முதியவர்கள், வழக்கறிஞர், பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒருவர், கட்சித்தலைவர் என்று பலதரப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஓர் இரவில் அதாவது 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு ‘பற’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன